புத்தக மதிப்பீட்டு வரிசையில் இது என்னுடைய முதல் மதிப்பீடு. வழமை போல் உங்கள் கருத்துகளை அறிந்திட அவளையுள்ளேன். உங்கள் கருத்துகளை தயவுசெய்து கீழே கமெண்ட் செய்யவும்.

மக்களின் மனதை புன்படுத்தவதை நான் எப்போதுமே விரும்புவதில்லை. மற்றவர்கள் என்னிலும் என்னுடைய பணியிலும் திருப்தி அடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களின் மனம் புண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் நான் அளவுக்கு அதிகமாக என்னை வருத்திக் கொண்டு தினமும் போராடுவதாக அண்மையில் நான் உணர்ந்தேன்.

கடந்த மாதம் ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது கடைசி நிமிடத்தில், “இதை நீங்கள் கொஞ்சம் மாற்ற முடியுமா? அதனை கொஞ்சம் சரி செய்ய இயலுமா?” என்று வேலைத்திதிட்ட உடன்படிக்கைகளுக்கு அப்பாற்ப்பட்ட பல வேண்டுகோள்களும், “இன்று மாலை நாம் சந்தித்து பேச முடியுமா?” என்று சில வேண்டுகோள்களும் எனக்கு வந்திருக்கக் கண்டேன். வழமைபோல் இவ்வாறான இறுதி நேர திடீர் வேண்டுகோள்களுக்கு என்னால் மறுப்பு தெரிவிக்க மிகவும் சிரமமாய் இருத்து. அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டு முடித்த என்னுடைய அன்றைய நாள் நேர சூசியுடன் இவ்வேண்டுகோள்கள் முரண்படுவதையும் தவிர்க்க முடியாமல் திண்டாடினேன்.

ஆகஸ்டோ பைனாடின் “நோ – இல்லை”

இன்று நான் எழுதப்போவது இம்மாதிரியான பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவே எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை பற்றியதுதான். ஆங்கிலத்தில் No என்கின்ற பதம் தமிழில் – “இல்லை”, “வேண்டாம்”, “மறுப்புரை”, “மறுப்பு தெரிவித்தல்” என்று பலவாறு அறிமுகப்படுத்தலாம்.

ஒரு வார்த்தையைக் கொண்டு ஒரு கையேடு போல மிகச்சிறந்த முறையில் இப்புத்தம் எழுதப்பட்ட எழுதப் பட்டிருக்கின்றது. இந்த புத்தகத்தின் பெயர் குறிப்பிடுவது போல “இல்லை (NO)” என்பதன் பல்வேறு அர்த்தங்களையும், பல்வேறு பயன்பாடுகளையும் விளக்குகிறது. இந்தப் புத்தகம் என்னுடைய வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும், அதன் விளைவாக நான், என்னுடைய எதிர்பார்ப்புகளையும், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளையும் எவ்வாறு கையாளுகிறேன் என்பதில் ஏற்பட்ட மாற்றங்களையும் நான் ஏற்கனவே உணர்ந்து கொண்டேன்.

“இல்லை” என்பதன் 3 பயன்பாடுகள்

ஆசிரியரின் கூற்றுப்படி, இல்லை என்பதை நாம் மூன்று அடிப்படையான விதங்களில் பயன்படுத்துகிறோம்.

  1. தவிர்க்கவேண்டிய “இல்லை” – இது நமது குழந்தைகளிடமும் நாம் அன்பு செலுத்துவோரிடமும் பயன்படுத்துவது.
  2. மிகச்சரியாக பயன்படுத்த வேண்டிய “இல்லை” – இது மற்றவர்களிடம் பயன்படுத்துவது.
  3. மிக முக்கியமான “இல்லை” – இது நமக்கு நாமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியது.

இந்த மூன்றிற்கும் இடையிலான வித்தியாசத்தை தெரிந்து கொள்ள ஆசிரியரால் அளிக்கப்பட்ட TedEx சொற்பொழிவை கீழ்க்கண்ட காணொளியைப் பார்க்க.

மேற்கண்ட காணொளி பெரும்பான்மையான கருத்துக்களை விளக்கினாலும், நான் அந்தப் புத்தகத்தை படிக்குமாறு பரிந்துரை செய்கிறேன். மேலும் அது சீக்கிரமே வாசித்து விடக்கூடிய மிகவும் சிறிய புத்தகம்.

சாதாரணமான பேச்சு வழக்கிலேயே எழுதப்பட்டிருப்பதால், இப்புத்தகத்தின் சொற்றொடர்கள் மிகவும் பெரியதாகவும் காற்புள்ளிகளால் வெகுவாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைந்த்துள்ளன. புத்தகத்தை பதிப்பித்து வெளியிடுவதற்குமுன், அங்கீகரிக்கப்பட்ட திருத்துனரை (Editor) கொண்டு திருத்தியிருந்தால் இம்மாதிரியான தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சொற்றொடர்கள் இவ்வாறு இருந்தாலும், இப்புத்தகத்தின் உள்ளடக்கம் மிகவும் மதிக்கத்தக்கது.

“இல்லை” உங்களுக்கான புத்தகமா?

நீங்கள் இல்லை என்று சொல்வதற்குப் போராடுவதாக உணர்கிறீர்களா?. அப்படியின் நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்கச் சொல்வதாகும். இது வெறும் க்கு மென்பொருள் வடிவிலோ அல்லது க்கு புத்தகமாகவோ கிடைக்கும் Amazon இணயத்தளத்தில் வாங்கலாம்.