விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

பொதுவானவை

இந்த இணையதளம் ValaVaalvu.com க்கு சொந்தமானது. அத்தோடு, அதுதான் இந்த இணையதளத்தை இயக்குகின்றது ('ValaVaalvu.com', 'நாம்', 'எம்மை'). இந்த இணையதளத்தை பயன்படுத்துவன் மூலம், இந்த சேவை விதிமுறைகளால் பிணைக்கப்படவும், இந்த சேவை விதிமுறைகள், எமது தனியுரிமை கொள்கை மற்றும் இந்த இணையதளத்தின் குறிப்பான பகுதிகளுக்கு அல்லது தயாரிப்புக்கள், சேவைகளுக்கு பிரயோகிக்கப்படுகின்ற நிபந்தனைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த இணையதளத்தை பயன்படுத்தவும் உடன்படுகிறீர்கள். தானியக்கமாகவோ அல்லது வேறுவைகயிலோ இந்த இணையதளத்தை அணுகுவது, இந்த இணையதளத்தை பயன்படுத்துவதாகவும், இந்த சேவை விதிமுறைகளுடன் பிணைக்கப்படுவதற்கு உடன்படுவதாகவும் அமைகிறது.

காலத்துக்கு காலம் இந்த சேவை விதிமுறை மாற்ற அல்லது இணையதளத்தை பயன்படுத்துவது தொடர்பில் புதிய நிபந்தனைகளை விதிப்பதற்கான உரிமை எமக்கு உள்ளது. இவ்வாறு செய்யும் பட்சத்தில், திருத்தப்பட்ட சேவை விதிமுறைகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்படும். இவ்வாறான திருத்தங்களை நாம் பதிவேற்றியதன் பிறகு, தொடர்ந்தும் நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தினால், திருத்தப்பட்ட சேவை விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டதாக அமையும்.

உங்களுக்கான எமது மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி

இந்த இணையதளமும், இணையதளத்திலுள்ள அனைத்து விடயங்களும் எமது மற்றும் / அல்லது எமது துணை நிறுவனங்கள் அல்லது அனுமதிப் பத்திரம் பெற்றோரின் உடமைகளாகும். இவை பதிப்புரிமை, வர்த்தக முத்திரை, மற்றும் ஏனைய புலமைச் சொத்து சட்டங்களின்படி பாதுகாக்கப்பட்டவையாகும். இந்த இணையதளம் உங்கள் பொருளாதார இலக்கற்ற தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவே வழங்கப்பட்டுள்ளது. எமது உரிமைகள் அல்லது எம்மால் அனுமதிக்கப்படாத விடயங்களை மீறும் வகையில் இந்த இணையதளத்தில் உள்ள விடயங்களை நீங்கள் பயன்படுத்தக்கூடாது.