தனியுரிமை கொள்கை

உங்கள் தனியுரிமை (அந்தரங்க உரிமை) உங்களுக்கு முக்கியம் என்பதை ValaVaalvu.com புரிந்துள்ளது. நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்ற வகையில், உங்களை தனியாக அடையாளம் காணக்கூடிய தகவல்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த தனியுரிமை கொள்கையானது, நாம் உங்களிடமிருந்து பெறும் தகவல்களை எவ்வாறு பாதுகாக்கின்றோம், எவ்வாறு பயன்படுத்துகின்றோம் என்பதை உங்களுக்கு விளக்கும். இந்த இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம், இந்த தனியுமை கொள்கையின் மிக சமீபத்திய பதிப்பில் விளக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்குகின்றீர்கள். நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துவது தொடர்பிலான பொதுவான விதிகளை புரிந்துகொள்வதற்கும், இந்த இணையதளத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளிலுள்ள குறிப்பான சேவைகள் அல்லது விடயங்களை அணுகும்போது பிரயோகத்துக்கு வருகின்ற மேலதிக விதிமுறைகளை புரிந்துகொள்வதற்கும், எமது பயன்பாட்டு விதிமுறைகளையும் நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். 'நாம்', 'எமது' என்பதன் மூலம் ValaVaalvu.com மற்றும் அதன் துணை நிறுவனங்கள் அர்த்தப்படுத்தப்படுகின்றது. 'நீங்கள்', 'உங்களது', 'தரிசிப்பவர்' அல்லது 'பயனர்' என்பதன் மூலம் இந்த இணையதளத்தை அணுகும் தனிநபர்கள் அர்த்தப்படுத்தப்படுகின்றனர்.

தனிப்பட்ட தகவல் மற்றும் தனிப்பட்டதாக அல்லாத தகவல்

எமது தனியுரிமை கொள்கையானது, உங்களது தனிப்பட்ட மற்றும் தனிப்பட்டதாக அல்லாத தகவல்களை எவ்வாறு நடாத்துகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்றது.

தனிப்பட்டதாக அல்லாத தகவல் என்றால் என்ன? அது எவ்வாறு சேகரிக்கப்படுகின்றது? எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது?

தனிப்பட்டதாக அல்லாத தகவல் என்பது உங்களை அடையாளம் காண முடியாத தகவலாகும். நீங்கள் - சில தகவல்களை வாசிப்பதற்காக, உதாரணமாக எமது ஒரு சேவை குறித்த தகவலை வாசிப்பதற்காக இந்த இணையதளத்தை தரிசித்தால், நாம் உங்கள் கணிணியின் இணைய உலாவியிலிருந்து உங்களைப் பற்றிய தனிப்பட்டதாக அல்லாத சில தகவல்களை சேகரிக்கலாம். ஏனெனில், தனிப்பட்டதாக அல்லாத தகவல்களால் ஒருபோதும் உங்களை அடையாளப்படுத்த முடியாது. அத்தோடு, உங்களோடு அவற்றை தொடர்புபடுத்தவும் முடியாது. நாம் தனிப்பட்டதாக அல்லாத தகவல்களை பயன்படுத்தும் அல்லது பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் குறித்து எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. தனிப்பட்ட தகவல் என்றால் என்ன? அவை எவ்வாறு சேகரிப்படுகின்றன? தனிப்பட்ட தகவல் என்பது உங்களை ஒரு நபராக அடையாளப்படுத்த முடியுமான தகவல்கள் ஆகும். உதாரணமாக உங்களது பெயர், தபால் முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் தொலைநகல் இலக்கம் போன்றவை. உங்களது தனிப்பட்ட தகவல்களை பல்வேறு வழிமுறைகளின் ஊடாக நாம் சேகரிக்கலாம்:

  • நீங்கள் எமக்கு ஒரு விண்ணப்பம் அல்லது வேறு படிவங்களை அனுப்பும்போது
  • நீங்கள் எம்மோடு, எமது துணை நிறுவனங்களோடு அல்லது வேறு ஏதாவது பரிமாற்றங்களை செய்யும்போது
  • ஒரு பரிமாற்றத்துக்கு உதவும் வகையில், உங்கள் கடன் அட்டை தகவல்கள் போன்ற தகவல்களை பெறும்போது
  • இந்த இணையதள்தின் சில பகுதிகளில் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை எமக்கு அனுப்புவதற்கும், குறிப்பான தகவல்களைப் பெறுவதற்கும், எமது தயாரிப்புக்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்காக அணுகவும், அல்லது ஒரு செயற்பாட்டில் பங்குகொள்வதற்குமான வாய்ப்பு உள்ளது.

தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கு Cookies அல்லது வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?

ஆம். எமது இணையதளத்தில் தகவல்களை சேகரிப்பதற்கு, Cookies மற்றும் web beacon போன்ற அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். Cookie என்பது ஒரு இணைய பக்க சர்வர் உங்கள் hard disk இல் பதிந்து வைக்கின்ற ஒரு எழுத்து வடிவிலான போப்பு ஆகும். உங்கள் கணிணியில் programs களை இயக்கவோ அல்லது வைரஸ்களை கொண்டு வந்து சேர்க்கவோ Cookies களால் முடியாது. Cookies கள் உங்களுக்கென்றே தனித்துவமாக ஒதுக்கப்பட்டவையாகும். உங்களுக்கு Cookies யை வழங்கிய இணைய சர்வரினால் மட்டுமே அதை வாசிக்க முடியும். உங்கள் நேரத்தை சேமிப்பதற்கு வசதியான அம்சத்தை வழங்குவது cookie களின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாகும். நீங்கள் குறிப்பிட்ட ஒரு பக்கத்துக்கு சென்றிருக்கிறீர்கள் என்பதை இணைய சர்வருக்கு அறிவிப்பதுதான் ஒரு cookie யின் நோக்கமாகும். உதாரணமாக, நீங்கள் எம்மோடு இணைந்தால், அடுத்தடுத்த தரிசிப்புக்கள் பற்றிய உங்களது குறிப்பிட்ட தகவலை மீளழைப்பதற்கு ஒரு cookie ஆனது ValaVaalvu.com க்கு உதவும். இது – billing addresses, shipping addresses மற்றும் அது போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்யும் செயல்முறையை இலகுபடுத்தும். நீங்கள் அதே ValaVaalvu.com இணையதளத்துக்கு மீளவும் சென்றால், நீங்கள் தனிப்பயனாக்கிய அம்சங்களை உங்களால் இலகுவாக பயன்படுத்தலாம். Web beacon என்பது ஒரு சிறிய graphic image ஆகும். இது - இதை அனுப்பிய தரப்புக்கு இணையதளம், இணைய மைய ஆவணம் அல்லது மின்னஞ்சல் ஆகியவற்றை பார்ப்போரின் குறிப்பிட்ட தகவல்களை, அதாவது Web beacon ஐ வேண்டுகின்ற உலாவியின் வகை, Web beacon அனுப்பப்பட்டுள்ள கணிணியின் IP முகவரி, Web beacon பார்க்கப்பட்ட நேரம் ஆகியவற்றை அவதானிக்கவும், சேகரிக்கவும் அனுமதிக்கின்றது. Web beacon மிகவும் சிறியதாகவும், பயனர் காணததாகவும் இருக்கும். ஆனால், பொதுவாக HTML ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாக, ஒரு இணையதள பக்கம் அல்லது மின்னஞ்சலின் ஒரு பகுதியாக பார்க்கப்படும் எந்தவொரு இலத்திரனியல் image உம் ஒரு Web beacon ஆக செயற்பட முடியும். இணயைதளத்தின் பக்கங்களை தரிசிப்போரின் எண்ணிக்கையை கணக்கிட அல்லது பயனர்கள் இணையதளத்தில் எவ்வாறு உலாவுகின்றனர் என்பதை அவதானிப்பதற்கு நாம் web beacon களை பயன்படுத்தலாம். அத்தோடு, அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் எத்தனை திறக்கப்பட்டுள்ளன, அல்லது முன்னகர்த்தப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்பதற்கும் மின்னஞ்சலிலும் நாம் web beacon களை பயன்படுத்தலாம்.

மூன்றாம் தரப்பு சேவையளிப்பாளர்களும் எமது இணையதளத்திலுள்ள cookie களை பயன்படுத்தலாம். உதாரணமாக, அநாமதேய தரிசிப்பு மற்றும் எம்மை தரிசிப்போர் மற்றும் உறுப்பினர்களிடமிருந்து தொகுதி புள்ளிவிபர தகவல்களை கண்காணிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் நாம் எமது இணையதளத்தில் cookie களை பயன்படுத்தும் மூன்றாம் தரப்புக்களுடன் ஒப்பம் செய்யலாம். இவ்வறான தகவல்கள் உள்ளக மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையிலேயே பகிரப்படும். இணையதளத்தை தரிசிப்போரரின் அனுபவத்தை மேம்படுத்தவும், எமது தளத்தின் உள்ளடக்கங்களை மேலாண்மை செய்யவும், தரிசிப்போரின் நடத்தையை கண்காணிக்கவும், எமக்கு உதவுவதற்காக இந்த மூன்றாம் தரப்புக்கள் நிலையான cookie களை பயன்படுத்துகின்றன. எம்மிடம் பதிவு செய்துகொண்ட பயனர்கள் / உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதற்கும், நாம் மூன்றாம் தரப்புடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.

எமது மின்னஞ்சல் தொடர்பாடலின் வினைதிறனை அளவிடுவதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுவதற்காக மூன்றாம் தரப்பு cookie களை நிறுவும். இந்த மூன்றாம் தரப்பு ValaVaalvu.com சார்பாக சேகரிக்கும் அனைத்து தரவுகளும், உள்ளக ரீதியில் அநாமதேயமாகவும் ஒருங்கிணைந்த வடிவில் மட்டுமே பகிரப்படும். காலத்துக்கு காலம் மூன்றாம் தரப்புக்கள் எமது இணையதளத்தில் விளம்பரங்களை பிரசுரிக்கவும் நாம் அனுமதிக்கலாம். மூன்றாம் தரப்பு விளம்பர சர்வர்களின் cookie அல்லது web beacon கள் இந்த மூன்றாம் தரப்பு விளம்பரங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கலாம். இந்த தனியுரிமை கொள்கையானது மூன்றாம் தரப்பு விளம்பர சர்வர்கள் உங்களிடமிருந்து சேகரிக்கும் தகவல்களை பயன்படுத்துவது குறித்துப் பேசுவதில்லை. இவ்வாறான மூன்றாம் தரப்பு விளம்பரங்களிலுள்ள cookie களை நாம் கட்டுப்படுத்துவதில்லை. ஒரு விளம்பரத்துடன் தொடர்புபடுவதற்கு முன்னர் அவர்கள் cookie களையும் ஏனைய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவது தொடர்பில் அறிந்துகொள்வதற்கு, அந்த விளம்பரங்களின் மற்றும் / அல்லது விளம்பர சேவைகளின் தனியுரிமைக் கொள்கைகளை பரிசீலிக்க வேண்டும். நாம் இந்த நிறுவனங்களுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்கொள்ள மாட்டோம். ஆனால், நீங்கள் விரும்புகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய விளம்பரங்களை இந்த இணையதளத்திலும், ஏனைய இணையதளங்களிலும் வழங்குவதற்காக, நீங்கள் இந்த இணையதளத்தையும், ஏனைய இணையதளங்களையும் தரிசிப்பது பற்றிய தகவல்களை இந்நிறுவனங்கள் பயன்படுத்தலாம். அத்தோடு, நீங்கள் அவர்களுக்கு வழங்கும் தனிப்பட்ட தகவல்களை, அவர்கள் ஏனையோருடன் பகிர்ந்துகொள்ளலாம்.

Cookie களை ஏற்கும் அல்லது மறுக்கும் திறன் உங்களுக்கு உள்ளது. பெரும்பாலான இணைய உலாவிகள், தானாகவே cookie களை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், நீங்கள் விரும்பினால் cookie களை மறுக்கும் வகையில் உங்கள் உலாவி அமைப்பை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் cookie களை மறுப்பதை தெரிவு செய்தால், நீங்கள் தரிசிக்கும் ValaVaalvu.com இணையதளத்தின் ஊடாடும் அம்சங்களை முழுமையாக அனுபவிக்க முடியாது போகும்.

நாம் உங்களிடமிருந்து அல்லது உங்களைப் பற்றி சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்களை, ValaVaalvu.com பின்வரும் விடயங்களுக்காக பயன்படுத்தும். அதாவது, உங்களுக்கு இந்த இணையதளத்தை அல்லது வேறு தயாரிப்புக்கள் அல்லது சேவைகளை அணுகுவதற்கு, உங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு, நீங்கள் வாங்கும் பொருட்கள் / சேவைகளுக்கு விலை பதிய, ஏற்கனவே உள்ள சேவைகள் மற்றும் உதவிகளை வழங்க, நீங்கள் விரும்புகின்ற எமதும் ஏனையோரதும் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களோடு உங்களை தொடர்புகொள்ள, அல்லது நிகழ்ச்சிகள், தயாரிப்புக்கள், சேவைகள் மற்றும் உள்ளடக்கங்களை ஆய்வு செய்து, மேம்படுத்துவதற்காக பகுப்பாய்வு நோக்கிலும், சேகரித்து வைக்கும் நோக்கிலும் எமது தயாரிப்புக்கள் அல்லது ஏனையோரின் தயாரிப்புக்கள் குறித்து உங்கள் கருத்தை கேட்பதற்கும் நாம் உங்களிடமிருந்து பெறும் தகவல்களை ValaVaalvu.com பயன்படுத்தும்.

ஒன்லைனில் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், நீங்கள் எமது மூலங்கள் ஊடாக வழங்கிய தகவல்களுடன் இணைக்கப்படும். நாம் உங்கள் தனிப்பட்ட அடையாள விடயங்களை (உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சமூக பாதுகாப்பு இலக்கம் போன்றன) நீக்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபர் என்ற தனித்துவம் இல்லாமல் போகும். நாம் தகவல்களை அடையாளப்படுத்தப்படும் நிலையிலிருந்து நீக்குகின்றபோது, ஏனை தனிப்பட்டதாக அல்ல தகவல்களை போன்றே இதையும் நடாத்தலாம். இறுதியில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை பின்வரும் நோக்கங்களுக்காக நாம் பயன்படுத்தலாம். அதாவது, எமது உரிமைகள் அல்லது சொத்துக்களை பாதுகாப்பதற்கு, அல்லது ஒருவரது ஆரோக்கியத்தை, பாதுகாப்பை அல்லது நலநன பாதுகாப்பதற்கு மற்றும் சட்டம் அல்லது கட்டுப்பாடு, நீதிமன்ற ஆணை அல்லது ஏனைய சட்ட செயல்முறைகளுடன் இணங்குவதற்கு பயன்படுத்தலாம்.

ValaVaalvu.com தனிப்பட்ட தகவல்களை ஏனையோருடன் பகிர்ந்துகொள்கிறதா?

இந்த இணையதளத்தில் சேகரிக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தகவல்களை, இந்த தனியுரிமை கொள்கையில் விளக்கப்பட்டுள்ள வகையில் அல்லாமல், சம்பந்தமற்ற ஒரு மூன்றாம் தரப்புடன், உங்கள் அனுமதியில்லாமல் பகிர்ந்துகொள்ள மாட்டோம். சாதாரண வணிக நோக்கில், எம் சார்பாக சேவைகள் அல்லது வியாபாரங்களை மேற்கொள்வதற்காக நாம் வேலைக்கமர்த்தும் நிறுவனங்களுடன் சில தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம். இவ்வாறான நிலையில், எமக்கு சேவையை வழங்கும் நோக்கில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு மூன்றாம் தரப்புக்கு வழங்கும்போது, நாம் அவர்களிடம் கோரிய சேவை தொடர்பில் பயன்படுத்துவதற்கு மாத்திரமேயன்றி, வேறு விடயங்களுக்காக உங்கள் தகவல்களை பேணவோ, வெளியிடவோ அல்லது பயன்படுத்தவோ நாம் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதில்லை.

பெருநிறுவன விற்பனை, இணைப்பு, கலைப்பு, கையகப்படுத்தல் ஆகிய சந்தர்ப்பங்கள் தவிர வேறு வகையில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை, நாம் விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ மாட்டோம். சில வகை பரிவர்த்தனைகளுக்காக, நாம் நேரடியாக சேகரிக்கும் தகவலோடு சேர்த்து, கடன், காப்புறுதி மற்றும் காப்போலை சேவைகள் வழங்கும் எமது மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் (கடன் அட்டை நிறுவனங்கள், தீர்வு அமைப்புக்கள் மற்றும் வங்கிகள் போன்றன) உங்களது பரிவர்த்தனை வேலையில் உங்களுக்கு உதவுவதற்காக, நேரடியாக உங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைப் பெறலாம். இந்த மூன்றாம் தரப்புக்கள் இவ்வாறான தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை நாம் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பெறுவதற்கு முன்னரே, அதை அவர்கள் எவ்வாறு பயன்படுத்த உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும்படி அவர்களிடம் நாம் கேட்போம். நீங்கள் எமது Facebook Fan Review செயலி ஊடாக ஒரு மூன்றாம் தரப்புக்கு (தனிநபர் அல்லது நிறுவனம்) ஒரு மதீப்பட்டை வழங்குவீர்களாயின், அதை வழங்கும்போது, உங்கள் அடிப்படை தகவல்களை (பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி) சேகரிப்பதற்கான அனுமதியை நாம் உங்களிடம் கேட்போம். நீங்கள் மதிப்பீட்டை வழங்கும் தரப்புடன் இந்தத் தகவல்களை நாம் பகிர்ந்துகொள்வோம். ஒரு நீதிமன்ற ஆணை, சம்மன், தேடல் ஆணை, சட்டம் அல்லது கட்டுப்பாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்கள் தனிப்பட்ட தகவல் வழங்குவதற்கு நாம் சட்ட ரீதியாக நிர்ப்பந்திக்கவும்படலாம்.

எங்கள் விதிகளை மீறுகின்ற அல்லது ஏனைய தரிசிப்போருக்கு தீங்கு விளைவிக்கின்ற (அல்லது சட்டவிரோத) நடத்தைகளில் ஈடுபடுகின்ற தரிசிப்போரை விசாரணை செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் சட்ட அமலாக்க தரப்புக்களுடன் நாம் ஒத்துழைக்கலாம். எமது உரிமைகள் அல்லது சொத்துக்களை பாதுகாப்பதற்கும், ஒருவரின் ஆரோக்கியம், பாதுகாப்பு அல்லது நலன் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், அல்லது ஒரு சட்டம் அல்லது கட்டுப்பாடு, நீதிமன்ற ஆணை அல்லது வேறு சட்ட செயல்முறைக்கு இணங்குவதற்கும் - உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒரு மூன்றாம் தரப்புக்கு வெளிப்படுத்துவது அவசியம் என்பதை நாம் உணர்ந்தால், நாம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்புக்களுக்கு வழங்கலாம். Cookies மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் குறித்த பகுதியில் விளக்கப்பட்டது போன்று, நாம் காலத்துக்கு காலம் ஒரு மூன்றாம் தரப்புக்கு இந்த இணையதளத்தில் விளம்பரங்களை வழங்குவதற்கு அனுமதிக்கலாம்.

நீங்கள் - விளம்பரதாரர்களின் விளம்பரங்களில் க்ளிக் செய்வது உள்ளிட்டு, அவர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், இந்த தனியுரிமை கொள்கையானது விளம்பரதாரர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தாது. நீங்கள் ஒரு விளம்பரத்துடன் தொடர்புபடுவதற்கு முன்னர் அந்த விளம்பரதாரர்களின் மற்றும் / அல்லது விளம்பர சேவைகளின் Cookie பயன்பாடு மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்துகொள்வதற்கு அவர்களின் தனியுரிமைக் கொள்கைகளை கட்டாயம் பரிசீலிக்க வேண்டும்.

தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாடல்களுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது?

சிலவேளை நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகள், தயாரிப்புக்கள், சேவைகள் மற்றும் உள்ளடக்கங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, அவ்வப்போது உங்களை நாம் மின்னஞ்சல், தபால் அல்லது தொலைபேசி ஊடாக தொடர்புகொள்வோம். அத்தோடு, இந்த இணையதளத்தின் சில அம்ச்ங்கள், ஒன்லைன் படிவங்கள் ஊடாக எங்களைத் தொடர்புகொள்வதற்கு உங்களை அனுமதிக்கின்றது. நீங்கள் தொடர்புகொள்ளும்போது நாம் அதற்கு பதிலளிக்க வேண்டியிருந்தால், மின்னஞ்சல் ஊடாக நாம் பதிலளிப்போம். மின்னஞ்சல் பதில் அல்லது உறுதிப்படுத்தல் உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கலாம். நாம் உங்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் அங்கீகரிக்கப்படாத இடைமறிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் என்று எம்மால் உத்தரவாதமளிக்க முடியாது.

தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன?

தனியாக அடையாளப்படுத்த முடியுமான தகவல்களை இழக்காமல், தவறாகப் பயன்படுத்தாமல், மாற்றாமல், அழிக்காமல் பாதுகாப்பதற்கு, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பு தரநிலைகளை நாம் செயல்படுத்துகின்றோம். அங்கீகாரமளிக்கப்பட்டவர்களும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களும் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக முடியும். அத்தோடு, இந்தத் தகவல்களை இரகசியமாகப் பேணும்படியும் இந்த ஊழியர்களிடமும் நிறுவனங்களிடமும் வேண்டப்பட்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கைகள் உள்ளபோதும், அங்கீகரிக்கப்படாதவர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுக மாட்டர் என்று எம்மால் உத்தரவாதம் வழங்க முடியாது.இணைப்புக்கள்

நாம் சுவாரஸ்யமானது என்று கருதுகின்ற தகவல்களை வழங்குகின்ற இணையதளங்களுக்கான இணைப்புக்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. இவ்வாறான இணையதளங்களின் தனியுரிமை நடைமுறைகள் மற்றும் உள்ளடக்கங்கள் பற்றி ValaVaalvu.com பொறுப்பாகாது.