புத்தாண்டை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் இந்த தருணத்தில், மலர்கின்ற புத்தாண்டை எவ்வாறு plan அதாவது திட்டமிட்டுகொள்வது என்பதனை இந்த போட்காஸ்ட்-இல் பார்க்க இருக்கிறோம். .

புத்தாண்டை திட்டமிடும் போது முக்கியமாக ஐந்து பிரிவுகளில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பது ராபின் ஷர்மா (Robin Sharma) வின் கருத்தாகும். எவ்வாறு இந்த ஐந்து பிரிவுகளிலும் கவனம் செலுத்தி வரும் வருடத்தை உங்களின் மிகச்சிறந்த வருடமாக்கிக் கொள்ளலாம் என்பதனை இந்த போட்காஸ்ட்-இல் நாம் பார்போம்.

போட்காஸ்ட் இனை செவிமடுக்க கீழுள்ள player ஐ கிளிக் செய்யுங்கள்.

[powerpress]

[wpdm_file id=1]

வளவாழ்வு இணையத்தளத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இவ்விணையத்தளம் தலைமைத்துவம், சுயஉதவி, சுய அபிவிருக்தி, சுயஉந்தல் சம்பந்தமாக உங்களை உத்வேகப்படுதக்கூடிய ஒரு தளமாக அமைய இருக்கின்றது. இவ்விணையத்தளம் – பொட்காஸ்ட் (Podcast), ஸ்கிரீன்காஸ்ட் (Screencast) மற்றும் இணையக் கருத்தரங்கு (வேபினர் – webinar) போன்றவற்றின் உதவியுடன் உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வழிகாட்டும்.

இந்த தளத்தின் முதலாவது பதிவாக வளவாழ்வு பொட்காஸ்ட் இடம் பெறுகின்றது. வளவாழ்வு போட்காஸ்ட் மாதம் இருமுறை மலரவிருக்கின்றது.

புத்தாண்டை ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் இந்த தருணத்தில், மலர்கின்ற புத்தாண்டை எவ்வாறு plan அதாவது திட்டமிட்டுகொள்வது என்பதனை இந்த போட்காஸ்ட்-இல் பார்க்க இருக்கிறோம். இன்று மாலை, 2013ம் ஆண்டை எனது வாழ்வின் ஒரு வெற்றிகரமானதொரு ஆண்டாக அமைத்துக் கொள்ள தேவையான அடிப்படை அமைப்பை நான் திட்டமிட்டு முடித்தேன். இத்திட்டமிடுதலின் போது மிக பிரபலமான தலைமைத்துவ பயிற்சியாளர் ராபின் ஷர்மாவின் ஆக்கமொன்றில் இருத்த வழிகாட்டுதல் எனக்கு பேருதவியாய் அமைந்தது. அதனை உங்களுடனும் பகிந்துகொள்ளுதல் காலோசிதமாக இருக்கும் அதே நேரம் உங்கள் வாழ்க்கையை திட்டமிடுதலிலும் பங்களிப்பு செய்யும் என நம்புகிறேன்.

புத்தாண்டை திட்டமிடும் போது முக்கியமாக ஐந்து பிரிவுகளில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும் ராபின் ஷர்மாவின் கருத்தாகும். எவ்வாறு இந்த ஐந்து பிரிவுகளிலும் கவனம் செலுத்தி பயனடைவது என்பதனை இந்த போட்காஸ்ட்-இல் பார்போம். இந்த ஐந்து வழிமுறைகளும், வரும் வருடத்தை உங்களின் மிகச்சிறந்த வருடமாக்க உதவும் என நான் நம்புகிறேன்.

முதல் படி : கொண்டாட்டம்

முதலாவதாக, இந்த வருடத்தின் முடிவில், நீங்கள் உங்களுக்காக சில நேரம் எடுத்துக்கொண்டு உங்களது சாதனைகளை எண்ணி கொண்டாட வேண்டும். நீங்களே உங்களிடம் இந்த கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள்.

கடந்தவிட்ட வருடத்தில் எனென்ன சாதனைகள், வெற்றிகளை பற்றி நீங்கள் அதிகமாக மகிழ்ச்சி கொள்கின்றீர்கள். எவ்வாறான தருணங்கள் மற்றும் எவ்வாறான செயட்படுகளை பற்றி பெருமிதம் கொள்ளுகின்றீர்கள். உங்களுடைய சிறிய வெற்றிகள், பாரிய வெற்றிகள் என அனைத்தையும் ஒரு குறிப்பேட்டிலோ அல்லது ஒரு காகிதத்திலோ எழுதுங்கள்.

இந்த பயிற்ச்சி சிறியதொரு விடயமாக தென்பட்டாலும் இதில் பல நன்மைகள் அடங்கி இருக்கின்றது. இவ்வாறு நீங்கள் குறிப்பெடுக்கும் போது அது உங்களுக்கு சென்ற வருடத்தை பற்றி ஒரு மன நிறைவையும், உற்சாகத்தையும் தருவதோடு எதிகொள்ளவிருக்கும் வருடத்துக்கு தேவையான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.

இரண்டாவது படி: கல்வி (Education)

தாங்கள் கடந்த வருடத்தில் கற்றுக்கொண்ட புதிய விஷயங்களை பற்றி நினைத்து பாருங்கள். இவ்வாறு பார்க்கும்போது உங்களால் கடந்த வருடத்தில் கற்று கொண்ட பாடங்களை வரும் வருடத்தில் உபயோகபடுத்த ஏதுவாக இருக்கும். ஏனெனில் எந்த அளவிற்கு நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை உங்கள் வாழ்வில் பயன்படுத்துகிரீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும் உங்களை நீங்களே இந்த கேள்வியை கேட்டு கொள்ளுங்கள்:

  1. கடந்த 12 மாதங்களில் என்னென்ன 3 நல்ல தொழில் சம்பந்தமான பாடங்களை நான் கற்றுக்கொண்டேன். அதற்கான பதில்களை குறித்துக்கொள்ளுங்கள். இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது வெளிப்படையாக இருங்கள்.
  2. கடந்த 12 மாதங்களில் என்னென்ன 3 நல்ல வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக்கொண்டேன் எனவும் குறித்துக்கொள்ளுங்கள். அதனை தொடர்ந்து, கடந்த வருடத்தில், நீங்கள் வெற்றி அல்லது நல்ல பலன்களை அடைகையில் எவ்வாறு செயல்பட்டிருந்தீர்கள் என்பதனை சற்று நினைத்து பாருங்கள். அதனையும் குறித்துக்கொண்டு வரும் வருடத்தில் அவற்றை பின்பற்றுங்கள்
  3. கடந்த 12 மாதங்களில் நீங்கள் திட்டமிட்டபடி சிறந்த பெறுபேறுகளை பெற்றிருந்தீர்களானால், நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருபீர்கள்? உங்கள் வாழ்க்கை எவ்வாறு அமைந்திருக்கும்? உங்களின் சிறந்த செயட்படுகளில் என்னென மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்? அதனையும் குறித்துக்கொள்ளுங்கள்.

மூன்றாவது படி: தெளிவுபடுத்துதல் (Clarification)

நீங்கள் உங்களது குறிக்கோள்களில் தெளிவாக இருந்தால் அது உங்களை சாதனையாளராக மாற்றும். வரும் வருடத்தில், உங்களுக்கு மிகவும் முக்கியமான 5 விஷயங்களை குறித்துக்கொண்டு அதனை நோக்கி பாடுபடுங்கள். இவ்வாறு செய்யும்போது, இந்த 5 முக்கியமான விஷயங்கள் உங்களை மற்ற தேவையற்ற விஷயங்களில் இருந்து விடைபெற்று உங்களின் குறிக்கோள்களை நோக்கி கவனம் செலுத்த உதவும். மேலும், உங்களுக்கு முக்கியமான 5 விழுமியங்கள் எழுதிக்கொண்டு அதனை பின்பற்றுங்கள். சுதந்திரம் உங்கள் ஒரு விழுமியமாக இருக்கலாம். அல்லது உறவுகளைப் பேணுதலாக இருக்கலாம். அல்லது உடல் சமநிலையை சிறப்பாக பேணுவதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவற்றை குறித்துக் கொள்ளுங்கள். இது எதிர்வருகின்ற வருடத்தை சிறப்பாக எதிர் கொள்ளத் தேவையான சக்தி மூலமாக இருக்கும்.

அதனை தொடர்ந்து, நீங்கள் வரும் வருடத்தில் அடைய விரும்பும் முக்கியமான 15 குறிக்கோள்களை அல்லது இலக்குகளை (goals) எழுதிக்கொள்ளுங்கள். என்னென்ன இலக்குகளை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அதனை நோக்கி உங்களின் முழு முயற்சி மற்றும் ஆற்றலை பயன்படுத்துங்கள். அத்துடன் இத்தனையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்:

படைப்பாற்றல் (Creativity) + துணிவு (Audacity) = தேர்ச்சி (Mastery).

ஏதேனும் ஒரு இலக்கை எடுத்துக்கொண்டு அதில் புதுமையாக யோசித்து அதனை தைரியமாக செயல்படுத்துங்கள்.

நான்காவது படி: முறைப்படுத்துதல் (Graduation)

இதுவரை, நாம் மூன்று படிகளான கொண்டாட்டம், கல்வி, தெளிவுபடுத்துதல் ஆகியவற்றை பார்த்தோம். நான்கவதாக, மிக முக்கியமானதுமான முறைபடுதுதல் பற்றி பார்ப்போம். இதுவரை, நீங்கள் குறித்திருந்த முக்கியமான செயல்கள், இலக்குகள், ஆகியவற்றை முறையாக ஒரு செயல்முறை திட்டமாக மாற்றுங்கள். அதாவது இலக்குகள் மற்றும் செயல்களை ஒவ்வொரு மாதத்திற்கும் பிரித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, முதல் மாதமான ஜனவரி மாதத்திற்கான திட்டத்தை அந்த மாதத்தில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறாக ஒவ்வொரு மாத்திலும் அதற்குண்டான இலக்கை நோக்கி செயல்படுங்கள்.

ஐந்தாவது படி: காட்சிப்படுத்துதல் (Visualisation)

கடந்த படியின் தொடர்ச்சியாக, நீங்கள் உங்களது இலக்குகளை நோக்கி பயணம் செய்யும் பட்சத்தில் வரும் ஆண்டின் இறுதியில் எந்த விதத்தில் மாற்றமடைய நினைத்தீர்களோ அதனை சற்று காட்சிப்படுதிப்பாருங்கள். அதாவது, வாழ்வியல் ரீதியாக, மதிப்பீடு ரீதியாக, கல்வி ரீதியாக, தேர்ச்சி ரீதியாக, எந்த அளவிற்கு நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதனை காட்சிப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி படுத்தகூடியாதாக, உங்களை உந்தக் கூடியதாக இந்த காட்சிப்படுத்துங்கள் அமைய வேண்டும். இந்த காட்சியினை ஒவ்வொரு நாளும் நினைத்துப்பாருங்கள். இது உங்களுக்கு உங்களது குறிக்கோள்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வர உதவும்.

இந்த ஐந்து வழிமுறைகளும் உங்களின் வரும் வருடத்தை உங்களின் மிக சிறந்த வருடமாக்க உதவும் என நம்புகிறேன். மேலும் இந்த போட்காஸ்ட் உங்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருந்தது என்பதனை அறிய மிகவும் ஆவலுடன் இருக்கிறோம். உங்களின் கருத்துக்களை நீங்கள் எங்களுக்கு [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். மேலும் எங்களது இணையத்தளத்தில் உள்ள தொடர்பு என்ற பகுதியில் நீங்கள் எங்களை facebook மற்றும் twitter வலைதளங்களில் தொடர்பு கொள்ளலாம்.